சப்- இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட பெண் கைது-டாக்டர் உள்பட 3 பேர் சிக்கினர்


சப்- இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட பெண் கைது-டாக்டர் உள்பட 3 பேர் சிக்கினர்
x

திருவண்ணாமலையில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் எழுத்து தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட பெண் கைது செய்யப்பட்டார். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது கணவர், டாக்டர் உள்பட 3 பேர் கைதாகினர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் எழுத்து தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட பெண் கைது செய்யப்பட்டார். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது கணவர், டாக்டர் உள்பட 3 பேர் கைதாகினர்.

சப்- இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு

தமிழகத்தில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்துத் தேர்வு கடந்த 26-ந் தேதி நடைபெற்றது. இந்த தேர்வு திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 மையங்களில் நடைபெற்றது.

இதில் தனியார் கல்லூரியில் மையமாக கொண்டு நடைபெற்ற தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தை சேர்ந்த சுமன் என்பவரின் மனைவி லாவண்யா என்பவர் பங்கேற்றார். சுமன் என்பவர் தற்போது சென்னையில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகின்றார்.

தேர்வின் போது லாவண்யா கழிப்பறைக்கு சென்று உள்ளார். சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக அவர் தேர்வு அறைக்கு வராததால் சந்தேகம் அடைந்த அறை கண்காணிப்பாளர் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.

மேலும் லாவண்யா இடத்தில் இருந்த வினாத்தாளும் காணாமல் இருந்து உள்ளது. இதையடுத்து கழிப்பறையில் இருந்து வெளியே வந்த அவரை போலீசார் தீவிர சோதனை செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கழிப்பறையில் வைத்து செல்போன் பயன்படுத்தி, அதன் மூலம் வினாத்தாளை புகைப்படம் எடுத்து 'வாட்ஸ் அப்' மூலம் அனுப்பி வைத்து விடைகளை பெற்று விடைத் தாளில் குறிப்பிட்டு முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

4 பேர் கைது

இதையடுத்து அவர் தொடர்ந்து தேர்வு எழுத அனுமதிக்கப்படாமல் வெளியேற்றப்பட்டார். இந்த தேர்வு முறைகேடு குறித்த அறிக்கை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது என்று போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தெரிவித்தார். இருப்பினும் இந்த சம்பவம் குறித்து வெறையூர் போலீசார் மூலம் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில் லாவண்யாவிற்கு தேர்வில் முறைகேட்டில் ஈடுபட அவரது கணவர் சுமன், அவலூர்பேட்டையை சேர்ந்த அதே பகுதியில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் சிவக்குமார், செங்கத்தை சேர்ந்த தனியார் மருத்துவமனை டாக்டர் பிரவீன்குமார் ஆகியோர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து முறைகேட்டில் ஈடுபட்ட லாவண்யா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சப்-இன்ஸ்பெக்டரான அவரது கணவர் சுமன், மற்றொரு சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார், டாக்டர் பிரவீன்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.


Next Story