ரூ.4 லட்சம் கடனை அடைக்க நிலத்தை எழுதி தராததால் மாமியாரை கொன்ற பெண் கைது


ரூ.4 லட்சம் கடனை அடைக்க நிலத்தை எழுதி தராததால் மாமியாரை கொன்ற பெண் கைது
x

போளூர் அருகே சமுதாய கூடத்தில் தூங்கிக்கொண்டிருந்த பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மூத்த மருமகளை போலீசார் கைது செய்தனர். ரூ.4 லட்சம் கடனை அடைக்க நிலத்தை எழுதி தராததால் மாமியாைர கொன்றதாக மருமகளை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை

போளூர்

போளூர் அருகே சமுதாய கூடத்தில் தூங்கிக்கொண்டிருந்த பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மூத்த மருமகளை போலீசார் கைது செய்தனர். ரூ.4 லட்சம் கடனை அடைக்க நிலத்தை எழுதி தராததால் மாமியாைர கொன்றதாக மருமகளை போலீசார் கைது செய்தனர்.

கொலை

ேபாளூர் அருகே புலிவானந்தல் கிராமத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சமுதாய கூடத்தில் தூங்கிக்கொண்டிருந்த காசியம்மாள் (வயது 85) என்ற பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

காசியம்மாளின் கணவர் மற்றும் செல்வம் உள்பட 2 மகன்கள் ஏற்கனவே இறந்து விட்டனர் மூன்றாவது மகன் சின்ன பையன் பராமரிப்பில் காசியம்மாள் இருந்து வந்தார். காசியம்மாளுக்கு 2 ஏக்கர் நிலம் உள்ளது. இவர் இளைய மகன் சின்ன பையன் வீட்டில் சாப்பிட்டு விட்டு அருகில் உள்ள சமுதாய கூடத்தில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில்தான் அவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் அணிந்திருந்த கம்மல் மற்றும் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

கொைலயாளிகள் குறித்து துப்பு துலக்க போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. கொலை நடந்த இடத்திலிருந்து மோப்பம் பிடித்து ஓடியது. கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். துணை போலீஸ் சூப்பிரண்டு குமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் தீவிர விசாரணையில் ஈடுபட்டார்.

மருமகள் கைது

இந்த நிலையில் மூத்த மருமகளான செல்வம் மனைவி தேவகி (50) மீது இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர் கொம்மனந்தல் பஸ் நிலையம் அருகே இருப்பது தெரியவரவே இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று தேவகியை பிடித்தனர். விசாரணையில் மாமியார் காசியம்மாளை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

தேவகிக்கு நரேஷ், சுரேஷ் என்ற 2 மகன்கள் உள்ளனர். சுரேஷ் உள்ளூரில் கூலி வேலை செய்கிறார். நரேஷ் செங்கல் சூளை நடத்தி பெருமளவு நஷ்டம் அடைந்து தற்போது ஆந்திர மாநிலம் நெல்லூரில் கூலி வேலை செய்து வருகிறார். அவருக்கு ரூ.4 லட்சம் கடன் உள்ளது. கடனை அடைக்க வேண்டும் எனவே மாமியார் காசியம்மாளிடம் உள்ள 2 ஏக்கர் நிலத்தை 3 பாகங்களாக பிரித்து கொடுக்க தேவகி வலியுறுத்தி வந்தார்.

ஆனால் மாமியார் காசி யம்மாள் 2 ஏக்கர் நிலத்தை இளைய மகன் சின்ன பையனுக்கு தான் கொடுப்பேன் என்று கூறிவிட்டார். இதனால் மாமியார் காசியம்மாளை கத்தியால் கழுத்தில் குத்திக் கொலை செய்ததாக போலீசாரிடம் தேவகி கூறியுள்ளார்.

இதனையடுத்து தேவகியை போலீசார் கைது செய்து போளூர் ஜுடீசியல் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story