போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த பெண் கைது


போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த பெண் கைது
x

போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த பெண் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

களியக்காவிளை காரக்காவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஜோஸ்பின் (வயது 42). இவர் ஒரு வழக்கு விசாரணைக்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் உள்ள சைபர் கிரைம் பிரிவுக்கு வந்து இருந்தார். அப்போது அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கொடுத்த புகாரின் பேரில் கோட்டார் போலீசார் ஜோஸ்பின் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்தநிலையில் அவர் திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறி மயங்கியதால் அவரை போலீசார் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கைது செய்யப்பட்ட ஜோஸ்பின், சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் மீது பாலியல் புகார் கூறியவர் என்பதும், அடிக்கடி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போராட்டம் நடத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Next Story