மேல்மலையனூர் அருகேவிஷ சாராயம் விற்ற பெண் கைது

மேல்மலையனூர் அருகே விஷ சாராயம் விற்ற பெண் கைது செய்யப்பட்டாா்.
விழுப்புரம்
மேல்மலையனூர்,
செங்கல்பட்டு, மரக்காணத்தில் விஷசாராயம் குடித்து பலியானவர்கள் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்து உள்ளது. பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில், தமிழகம் முழுவதும் சாராய விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த வகையில், மேல்மலையனூர் அருகே நெகனூர்பட்டி கிராமத்தில் வளத்தி போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சாராயம் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது ராமச்சந்திரன் மனைவி எல்லம்மாள் (வயது 55) என்பவர் சாராயம் விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, 5 லிட்டர் விஷசாராயம், 7 பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story