கோவில் விழாவில் குழந்தையிடம் கொலுசு திருடிய பெண் கைது


கோவில் விழாவில் குழந்தையிடம் கொலுசு திருடிய பெண் கைது
x

கோவில் விழாவில் குழந்தையிடம் கொலுசு திருடிய பெண் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை

சேத்துப்பட்டு

கோவில் விழாவில் குழந்தையிடம் கொலுசு திருடிய பெண் கைது செய்யப்பட்டனர்.

பெரணமல்லூரை அடுத்த வாழப்பந்தல் கிராமத்தில் உள்ள பச்சையம்மன் கோவிலில் திருவிழா நடந்தது. திருவிழாவிற்கு அறிவுடைதாங்கல் அருகே உள்ள செம்பட்டை கிராமத்தில் வசிக்கும் பிரகாஷ், அவரது மனைவி ரஞ்சனி ஆகியோர் தங்களது குழந்தைகளுடன் வந்தனர்.

ரஞ்சனி தனது குழந்தைகளுடன் சாமி கும்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த திருவண்ணாமலை அம்பேத்கர் நகரை சேர்ந்த ஜோதி (வயது 43) என்ற பெண், குழந்தையின் காலில் இருந்து வெள்ளி கொலுசுவை திருடியபோது கையும் களவுமாக பக்தர்கள் பிடித்தனர்.

அவரை பெரணமல்லூர் போலீசில் அங்கிருந்தவர்கள் ஒப்படைத்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் வழக்குப்பதிவு செய்து ஜோதியை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story