குமரியில் ரேஷன் அரிசி கடத்த முயன்ற பெண் கைது
குமரியில் ரேஷன் அரிசி கடத்த முயன்ற பெண் கைது செய்யப்பட்டார்.
நாகர்கோவில்,
குமரியில் ரேஷன் அரிசி கடத்த முயன்ற பெண் கைது செய்யப்பட்டார்.
கைது
குமரி மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜி தலைமையில் போலீசார் நேற்று திருத்துவபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினி டெம்போ ஒன்றை நிறுத்தும்படி சைகை காட்டினார். போலீசாரை கண்டதும் மினி டெம்போவை நிறுத்திவிட்டு, டிரைவர் தப்பி ஓடிவிட்டார். உடனே போலீசார் டெம்போவில் சோதனை நடத்தினர். அப்போது டெம்போ பின்னால் சிறு, சிறு மூடைகளில் 600 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் டெம்போவில் வில்லுக்குறியை சேர்ந்த லைலா (வயது 48) என்ற பெண்ணும் இருந்தார். உடனே லைலாவை போலீசார் கைது செய்தனர். பின்னர் டெம்போவுடன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் வடசேரி போலீசார் செட்டிகுளம் பகுதியில், ஆட்டோவுடன் 250 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இதில் ஆட்டோ டிரைவர் தப்பி ஓடிவிட்டார். பின்னர் ஆட்டோவுடன் ரேஷன் அரிசியை மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.