பெண்ணிடம் தங்க சங்கிலியை பறிக்க முயன்ற பெண் கைது


பெண்ணிடம் தங்க சங்கிலியை பறிக்க முயன்ற பெண் கைது
x

பெண்ணிடம் தங்க சங்கிலியை பறிக்க முயன்ற பெண் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை

ஆலங்குடி:

ஆலங்குடி அருகே வடவாளம் மாமுண்டிக்கருப்பர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அப்போது வடவாளத்தை சேர்ந்த கருப்பையா மனைவி மாரிக்கண்ணு (வயது 55) என்பவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க சங்கிலியை பெண் ஒருவர் பறிக்க முயன்றார். இதையடுத்து அந்த பெண்ணை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தியதில் மாரிக்கண்ணுவிடம் தங்க சங்கிலியை பறிக்க முயன்றது தஞ்சாவூர் மாவட்டம், பர்மா காலனியை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி செல்வி (68) என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் விசாரணை நடத்தியதில் மாரிக்கண்ணுவிடம் தங்க சங்கிலியை பறிக்க முயன்றதை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை செம்பட்டிவிடுதி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்வியை ஆலங்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story