போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்ல முயன்ற பெண் கைது


போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்ல முயன்ற பெண் கைது
x

போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்ல முயன்ற பெண் கைது செய்யப்பட்டார்

திருச்சி

செம்பட்டு,ஜூன்.7-

தஞ்சை மாவட்டம் நாஞ்சிகோட்டை ரோடு 2-வது தெருவைச் சேர்ந்தவர் சாந்தா (வயது 43). இவர் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் வீட்டு வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்து இருந்த அவர் மீண்டும் கோலாலம்பூர் செல்ல திருச்சி விமானநிலையத்துக்கு வந்தார். அப்போது, அவரது பாஸ்போர்ட்டை சோதனை செய்தததில் அவர் போலி முகவரியில் பாஸ்போர்ட் பெற்று இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை ஏர்போர்ட் போலீசார் கைது செய்தனர்.


Next Story