1 கிலோ கஞ்சாவுடன் பெண் பிடிபட்டார்


1 கிலோ கஞ்சாவுடன் பெண் பிடிபட்டார்
x

1 கிலோ கஞ்சாவுடன் பெண் பிடிபட்டார்

கன்னியாகுமரி

கொல்லங்கோடு:

கொல்லங்கோடு பகுதியில் உள்ள அரசு பள்ளி வளாகம் முன்பு சந்தேகத்திற்கு இடமான வகையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கையில் பொட்டலத்துடன் நிற்பதாக கொல்லங்கோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

உடனே இன்ஸ்பெக்டர் ரமா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதனை கவனித்த அந்த பெண் தப்பி ஓட முயன்றார். ஆனால் போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில், தமிழக-கேரள எல்லை பகுதியான அணுக்கோடு பகுதியில் தங்கியபடி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த ராணி என்ற ஆட்டோ ராணி (வயது 48) என்பது தெரியவந்தது. மேலும் அவரிடமிருந்து 1 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராணியை கைது செய்தனர்.


Next Story