காதல் திருமணம் செய்த மகன் பேசாததால் பெண் தற்கொலை
விருதுநகரில் காதல் திருமணம் செய்த மகன் பேசாததால் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள சிவரக்கோட்டையை சேர்ந்தவர் மாரீஸ்வரன் (வயது 48). இவரது மனைவி புஷ்பராணி (45). இவர்களது மூத்த மகன் ருஜித்குமார், திருமங்கலத்தை சேர்ந்த நிவேதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதிலிருந்து தனது பெற்றோருடன் பேசுவதை நிறுத்திவிட்டார்.இதனால் மன வேதனை அடைந்த புஷ்பராணி விருதுநகர் அருகே உள்ள வடமலைக்குறிச்சியில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு வந்தார். அங்கு அலுமினிய பவுடரை கரைத்து குடித்து விட்டதாக கூறப்படுகிறது. உடனே அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி மாரீஸ்வரன் கொடுத்த புகாரின்பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Related Tags :
Next Story