விஷம் தின்று பெண் தற்கொலை
குளித்தலையில் விஷம் தின்று பெண் தற்கொலை செய்து கொண்டார்.
விஷம் தின்ற பெண்
கரூர் மாவட்டம், குளித்தலை பெரியபாலம் மலையப்ப நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜூ. இவரது மனைவி பழனியம்மாள் (வயது 42). இவருக்கு வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதனால் கடந்த ஓராண்டாக பழனியம்மாள் வயிற்று வலி மருந்து மற்றும் மாத்திரை சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் வயிற்று வலி சரியாகவில்லையாம்.
இந்தநிலையில் நேற்று முன்தினமும் பழனியம்மாளுக்கு வயிற்று வலி அதிகமாக ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த பழனியம்மாள் அரளி விதையை (விஷம்) தின்று விட்டு குளித்தலை ரெயில்வே கேட் அருகே மயங்கி கிடந்துள்ளார்.
தற்கொலை
இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் மயங்கி கிடந்த பழனியம்மாளை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பழனியம்மாள் பரிதாபமாக இறந்தார்.
இந்த தற்கொலை சம்பவம் குறித்த புகாரின்பேரில், குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விஷத்தை தின்று பெண் தற்ெகாலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.