விஷம் தின்று பெண் தற்கொலை


விஷம் தின்று பெண் தற்கொலை
x

விஷம் தின்று பெண் தற்கொலை செய்து கொண்டார்.

அரியலூர்

மீன்சுருட்டி:

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள முக்குளம் பெரிய ஏரிக்கரையை சேர்ந்தவர் ராசு. இவருடைய மனைவி மாரியம்மாள் (வயது 60). இவருக்கும், ராசுவுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பேசாமல் இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த எலி மருந்து(விஷம்) பவுடரை தின்றுவிட்டு மயங்கிய நிலையில் இருந்த மாரியம்மாளை, உறவினர்கள் மீட்டு மீன்சுருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி வழக்குப்பதிவு செய்து, மாரியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story