விஷம் குடித்து பெண் தற்கொலை
கம்பம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
தேனி
கம்பம் அருகே உள்ள க.புதுப்பட்டி சர்ச் தெருவை சேர்ந்தவர் சென்றாயப்பெருமாள். இவரது மனைவி சுதா (வயது 36). இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது சுதா அரளி விதையை (விஷம்) அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். சுதா தற்கொலை செய்ததற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story