விஷம் குடித்து பெண் தற்கொலை


விஷம் குடித்து பெண் தற்கொலை
x

விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெற்றியூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் ஒரு பெண்ணை ஆசை வார்த்தைகள் கூறி, கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது அந்த பெண், சிறுமியாக இருந்ததால் இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜ்குமாரை கைது செய்தனர்.

மேலும் இது குறித்து அரியலூர் மகிளா கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் ராஜ்குமார் வரதட்சணை கேட்டு தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அந்த பெண் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனையடுத்து உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வரதட்சணை கொடுமை காரணமாக அந்த பெண் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து அரியலூர் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story