விஷம் குடித்து பெண் தற்கொலை
விஷம் குடித்து பெண் தற்கொலை கொண்டார்.
கரூர்
கடவூர் வட்டம், இடையபட்டியை சேர்ந்தவர் முருகேசன் இவரது மனைவி லீலாவதி (வயது 38). இவர்களுக்கு திருமணமாகி 11, 13 வயதில் 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் லீலாவதிக்கு பல ஆண்டுகளாக வலிப்பு நோய் இருந்துள்ளது. இதனால் அவர் அந்த நோய்க்கு மருந்து சாப்பி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று டானிக் என நினைத்து வயலுக்கு வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து தண்ணீரில் கலந்து குடித்து மயங்கி விழுந்தார். இதைக்கண்ட முருகேசன் லீலாவதியை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லீலாவதி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து லீலாவதியின் தாயார் கொடுத்த புகாரின்பேரில், பாலவிடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story