விஷம் குடித்து பெண் தற்கொலை
சிவகாசி அருகே மகளுக்கு திருமணம் ஆகாத வருத்தத்தில் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
சிவகாசி,
சிவகாசி அருகே மகளுக்கு திருமணம் ஆகாத வருத்தத்தில் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
திருமணம் ஆகவில்லை
சிவகாசி அருகே உள்ள நாரணாபுரம் புதூர் ரோட்டில் உள்ள ராஜூவ்காந்தி நகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி முத்துமாரி (வயது 57). இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள். இதில் மகன்கள் இருவருக்கும் திருமணம் ஆகி விட்டது. மகள்கள் இருவருக்கும் திருமணம் ஆகவில்லை.
மூத்த மகள் கிருஷ்ணவேணி சிவகாசியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். 2-வது மகள் காளீஸ்வரி சிவகாசியில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் மூத்த மகள் கிருஷ்ணவேணிக்கு 29 வயது ஆகியும் திருமணம் நடக்காததால் முத்துமாரி மிகுந்த மனவருத்தத்தில் இருந்து வந்தார்.
தாய் தற்கொலை
இந்தநிலையில் கடந்த 20-ந் தேதி மதியம் வீட்டில் இருந்த விஷத்தை முத்துமாரி குடித்து விட்டார். இதை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிவகாசியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் முத்துமாரி பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து முருகேசன் சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மகளுக்கு திருமணம் ஆகாத வருத்தத்தில் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சிவகாசி நாரணாபுரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.