விஷம் குடித்து பெண் தற்கொலை
விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர்
தாயில்பட்டி,
தாயில்பட்டி அருகே உள்ள சல்வார்பட்டி கிழக்கு தெரு காலனியில் கோழி பண்ணை நடத்தி வருபவர் முருகன் (வயது 42). இவரது மனைவி மாரீஸ்வரி (38). இவர் வயிற்று வலியினால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனவேதனை அடைந்த அவர் களைக்கொல்லி மருந்தை (விஷம்)குடித்து மயங்கி கிடந்தார். உடனடியாக முருகன் அவரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story