விஷம் குடித்து பெண் தற்கொலை


விஷம் குடித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 18 Jan 2023 12:15 AM IST (Updated: 18 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

சின்னசேலம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்

சின்னசேலம் அருகே செல்லியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் செல்லப்பன் மகன் செல்வகுமார்(வயது 30). இவரது மனைவி கனகா(25). இவர்களுக்கு சித்ரேஸ்(6) என்ற மகன் உள்ளான்.

இந்த நிலையில் சம்பவத்தன்று விஷம் குடித்து மயங்கி விழுந்த கனகாவை அவரது கணவர் செல்வகுமார் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார். தீராத வயிற்று வலியால் அவதியுற்ற கனகாவுக்கு பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் வலி குறையாததால் விரக்தி அடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story