விஷம் குடித்து பெண் தற்கொலை
விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
சேத்துப்பட்டு
விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
சேத்துப்பட்டு அருகே உள்ள அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமஜெயம். கூலி தொழிலாளி. இவரது மனைவி வெண்ணிலா (வயது 26). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கணவனுக்கும் மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்றும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த வெண்ணிலா, வாழ்வதைவிட சாவதே மேல் என நினைத்து விஷத்தை குடித்துவிட்டு விட்டார்.
இதில் மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேத்துப்பட்டு அரசுமருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்ததில் வெண்ணிலா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இது குறித்து சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி வழக்குப் பதிவு ெசய்து வெண்ணிலா உடலை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலைஅரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.