விஷம் குடித்து பெண் தற்கொலை


விஷம் குடித்து பெண் தற்கொலை
x

விஷம் குடித்து பெண் தற்கொலை

தஞ்சாவூர்

பாபநாசம் கோபுராஜபுரம் வடக்கு தெருவை சேர்நதவர் இளங்கோவன். இவரது மனைவி சித்ரா (வயது 36). இவர் அடிக்கடி வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். பல டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றும் வயிற்றுவலி குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த சித்ரா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தை(விஷம்) குடித்தார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சித்ரா இறந்தார். இதுகுறித்து சித்ராவின் தாயார் பூங்கோதை ( 66) கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story