தூக்குப்போட்டு பெண் தற்கொலை
தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
புதுக்கோட்டை
அரிமளம்:
அரிமளம் ஒன்றியம், கீழப்பனையூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவர் மராட்டிய மாநிலத்தில் சிற்பங்கள் செய்யும் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி நந்தினி (வயது 27). இவருக்கு வயிற்றுவலி இருந்து வந்தது. இதனால் மனமுடைந்த நந்தினி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்த அரிமளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நந்தினி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story