தூக்குப்போட்டு பெண் தற்கொலை


தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x

தூக்குப்போட்டு பெண் தற்கொலை

ராமநாதபுரம்

பரமக்குடி

பரமக்குடி வைகைநகர் பகுதியைச் சேர்ந்தவர் கபிலன். இவருக்கும் தமிழ் பிரதீபா(வயது21) என்பவருக்கும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திருமணமானது. இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அடிக்கடி மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இந்நிலையில் தமிழ் பிரதீபா வீட்டில் தூக்குப்போட்டு இறந்துவிட்டார். தகவல் அறிந்ததும் அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் வந்து கதறி அழுதனர். பின்பு போலீசார் வந்து இறந்த தமிழ் பிரதீபா வின் உடலை கைப்பற்றி பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரது தந்தை கதிரேசன் எமனேஸ்வரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.புகாரின்பேரில் எமனேஸ்வரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story