கடன் தொல்லையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை


கடன் தொல்லையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

தக்கலை அருகே கடன் தொல்லையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து ெகாண்டார்.

கன்னியாகுமரி

தக்கலை:

தக்கலை அருகே கடன் தொல்லையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தொழிலாளி மனைவி

தக்கலை அருகே உள்ள கீழகல்குறிச்சி, வடக்குவிளையை சேர்ந்தவர் வைகுண்டமணி, கூலி தொழிலாளி. இவரது மனைவி செல்வகுமாரி (வயது52). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகன் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். மகள் ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.

செல்வகுமாரி நோயால் அவதிபட்டு வந்தார். மருத்துவ செலவுக்காக பலரிடம் இருந்து பணம் கடன் வாங்கியுள்ளார். வாங்கிய கடனை திரும்ப கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால், கடந்த சிலநாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.

தூக்குப்போட்டு தற்கொலை

நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள அனைவரும் தூங்க சென்றனர். நேற்று காலையில் செல்வகுமாரியை படுக்கை அறையில் காணவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த வைகுண்டமணி மனைவியை வீட்டில் தேடினார். அப்போது, சமையல் அறையில் செல்வகுமாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் தொங்கி கொண்டிருந்தார். இதை பார்த்த வைகுண்டமணி அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தக்கலை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடன் தொல்லையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story