விரத மாலையை கணவர் கழற்றியதால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை


விரத மாலையை கணவர் கழற்றியதால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

திருப்பத்தூரில் விரத மாலையை கணவர் கழற்றியதால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 38), ஆட்டோ டிரைவர். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு கார்த்திகை மாதத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு விரதம் இருந்து நடைபயணம் செல்வதற்காக ரமேஷ் மாலை அணிந்தார். ஆனால் சில காரணத்தினால் மனைவிக்கு தெரியாமல் அவர் மாலையை கழற்றியதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் விரத்தியடைந்த கவிதா நேற்று முன்தினம் வீட்டின் அறைக்குள் சென்று தூக்குப்போட்டு கொண்டார்.

உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருப்பத்துார் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில், திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story