குழந்தை இல்லாத ஏக்கத்தில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை
குழந்தை இல்லாத ஏக்கத்தில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
பெரம்பலூர் மாவட்டம், களரம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜெகன். இவரது மனைவி ரஞ்சனிதேவி (வயது 33). இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் குழந்தை இல்லாத ஏக்கத்தில் ரஞ்சனிதேவி இருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ரஞ்சனிதேவி வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற பெரம்பலூர் போலீசார் ரஞ்சனிதேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோட்டாட்சியர் விசாரணை
ரஞ்சனிதேவி தற்கொலை செய்து கொள்வதற்கு முன் செல்போனில் வீடியோ மூலம் 'என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை' என்று பேசி பதிவு செய்துள்ளார். அந்த செல்போனை போலீசார் கைப்பற்றினர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியரும் விசாரணை நடத்தி வருகிறார்.