குழந்தை இல்லாத விரக்தியில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை


குழந்தை இல்லாத விரக்தியில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x

விருத்தாசலம் அருகே குழந்தை இல்லாத விரக்தியில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் அருகே உள்ள விஜயமாநகரம் புதுவிளாங்குளத்தை சேர்ந்தவர் மணிகண்டன். மரம் வெட்டும் தொழிலாளி. இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி ராஜலட்சுமிக்கு வீரசெல்வன்(வயது 16), வீரக்குமார்(14) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். குடும்ப பிரச்சினையால் ராஜலட்சுமி கடந்த 2009-ம் ஆண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து மணிகண்டன் பண்ருட்டி தாலுகா சாத்திப்பட்டை சேர்ந்த விஜயலட்சுமி(32) என்பவரை கடந்த 8 ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். ஆனால் விஜயலட்சுமிக்கு குழந்தை இல்லை. இதனால் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.

தற்கொலை

இந்த நிலையில் நேற்று மணிகண்டன் மரம் வெட்டும் தொழிலுக்கு சென்று விட்டார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குழந்தை இல்லாத விரக்தியில் விஜயலட்சுமி சாரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே வேலைக்கு சென்று இருந்த மணிகண்டன் வீட்டிற்கு வந்தார். அங்கு விஜயலட்சுமி தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் மங்கலம்பேட்டை போலீசார் விரைந்து வந்து விஜயலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story