பெண் தீக்குளித்து தற்கொலை


பெண் தீக்குளித்து தற்கொலை
x

பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

கரூர்

மண்மங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் அருகே உள்ள மொச்ச கொட்டாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நடேசன். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 55). இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலம் சரியில்லாம் இருந்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த மகேஸ்வரி சம்பவத்தன்று வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை உடல் எடுத்து ஊற்றி தீ வைத்து கொண்டார். வலியால் அலறி துடித்த அவரை அங்கிருந்தவர்கள் காப்பாற்றி சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகேஸ்வரி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த தற்கொலை குறித்து கரூர் டவுன் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தர வடிவேல் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்


Next Story