வயிற்று வலியால் பெண் தற்கொலை


வயிற்று வலியால் பெண் தற்கொலை
x

வயிற்று வலியால் பெண் தற்கொலை செய்து கொண்டார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா தெரணி கிராமத்தை சேர்ந்தவர் மலர்க்கொடி (வயது 55). இவருடைய கணவர் இறந்து விட்டதால் மலர்க்கொடி தனியாக வசித்து வந்தார். மேலும் இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், நேற்று காலை இவரது மகள் விஜயா தனது தாயாரை பார்ப்பதற்காக செட்டிகுளத்தில் இருந்து வந்தார். அப்போது மலர்க்கொடி தீராத வயிற்றுவலி காரணமாக தோட்டத்தின் அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் மலர்க்கொடியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story