மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை


மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை
x

மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம், அம்பலூர் அருகே உள்ள ராமநாயக்கன் பேட்டை பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி நந்தினி (வயது 29) இவர்களுக்கு 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

நந்தினி கடந்த வாரம் திருப்பத்தூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கிருந்த அவர் நேற்று முன்தினம் வீட்டு மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் சப்- கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


Next Story