தீக்குளித்து பெண் தற்கொலை
புறாக்கிராமத்தில் தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
திட்டச்சேரி:
திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி புறாக்கிராமம் புதுமனை தெருவை சேர்ந்தவர் முகமதுஅலி. ஓட்டல் நடத்தி வருகிறார். இவருக்கு ஜெபுருஷ் நிஷா (வயது 44) என்ற மனைவியும், ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். மகளை திருமணம் செய்து கொடுத்து விட்டனர். மகன் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். ஜெபுருஷ் நிஷா கடந்த 2 ஆண்டுகளாக நரம்பு தளர்ச்சி மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன் தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜெபுருஷ் நிஷா வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை தனக்குத்தானே உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் ஜெபுருஷ் நிஷாவை மீட்டு நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஜெபுருஷ் நிஷா சிகிச்சை பலனின்றி அன்று இரவே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த திட்டச்சேரி போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.