தீக்குளித்து பெண் தற்கொலை


தீக்குளித்து பெண் தற்கொலை
x

சிவகாசி அருகே தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி அருகே உள்ள மாரனேரி நடுத்தெருவை சேர்ந்தவர் நாராயணன் மனைவி பஞ்சவர்ணம் (வயது 48). இவரது கணவர் நாராயணன் ஏற்கனவே இறந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் மகன் சங்கர்பாண்டி இறந்தார். இதனால் மனவேதனையில் இருந்த பஞ்சவர்ணம் சம்பவத்தன்று வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மாரனேரி போலீசார், பஞ்சவர்ணத்தின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story