ஆபாசமாக படம் எடுத்து மிரட்டுவதாக 2 சிறை போலீஸ்காரர்கள் மீது பெண் புகார்-போலீசார் விசாரணை
ஆபாசமாக படம் எடுத்து மிரட்டுவதாக 2 சிறை போலீஸ்காரர்கள் மீது பெண் ஒருவர் கொடுத்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம்
சேலத்தை சேர்ந்த 25 வயதுடைய பெண் ஒருவர் அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்தார். அதில், '2 சிறை போலீஸ்காரர்களுடன் இன்ஸ்டாகிராம் மூலம் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவர்களை நேரில் சந்தித்து பேசினேன். இதற்கிடையில் அவர்களுடன் நெருங்கி பழகி வந்தேன். அப்போது அவர்கள் எனக்கு தெரியாமல் என்னை ஆபாசமாக வீடியோ எடுத்து உள்ளனர். இந்த நிலையில் அந்த வீடியோவை காட்டி என்னை மிரட்டி வருகின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது. இந்த பெண் கூறுவது உண்மை தானா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story