பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்

பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்
x

திருவாரூாில் , போலீஸ் விசாரணைக்கு சென்று வந்த வாலிபர் தற்கொலை செய்தது தொடர்பாக பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை ஆயுதப்படைக்கு மாற்றி போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

திருவாரூர்

திருவாரூர்;

திருவாரூாில் , போலீஸ் விசாரணைக்கு சென்று வந்த வாலிபர் தற்கொலை செய்தது தொடர்பாக பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை ஆயுதப்படைக்கு மாற்றி போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

விஷம் குடித்து தற்கொலை

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள மடப்புரம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகன் ராகுல்ராஜ்(வயது22). இவர் ஒரு 17 வயது சிறுமியை காதலித்ததாக பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் திருவாரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ராகுல்ராஜிடம் சப்-இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி விசாரணை நடத்தினார்.இதைத்தொடர்ந்து வீட்டுக்கு வந்த ராகுல்ராஜ் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஆயுதப்படைக்கு மாற்றம்

இந்தநிலையில் போலீசார், தனது மகனை தாக்கியதால் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டதாக ராகுல்ராஜ் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதைத்தொடர்ந்து திருவாரூர் அனைத்து மகளிா் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மகாலட்சுமியை ஆயுதப்படைக்கு மாற்றி போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவிட்டார்.

Next Story