கொட்டாம்பட்டி அருகே வேனில் தொங்கிய கயிறு கழுத்தில் சிக்கியதால் தலை துண்டித்து பெண் பலி- வேனில் தொங்கிய கயிறு கழுத்தில் சிக்கியதால் தலை துண்டித்து பெண் பலி


கொட்டாம்பட்டி அருகே  வேனில் தொங்கிய கயிறு கழுத்தில் சிக்கியதால் தலை துண்டித்து பெண் பலி-  வேனில் தொங்கிய கயிறு கழுத்தில் சிக்கியதால் தலை துண்டித்து பெண் பலி
x

கொட்டாம்பட்டி அருகே வைக்கோல் ஏற்றி வந்த வேனில் தொங்கிய கயிறு பெண் கழுத்தில் சிக்கியதால் அவர் தலை துண்டித்து பரிதாபமாக இறந்தார்.

மதுரை

கொட்டாம்பட்டி

கொட்டாம்பட்டி அருகே வைக்கோல் ஏற்றி வந்த வேனில் தொங்கிய கயிறு பெண் கழுத்தில் சிக்கியதால் அவர் தலை துண்டித்து பரிதாபமாக இறந்தார்.

துக்க நிகழ்ச்சிக்கு சென்றனர்

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள கம்பூரை சேர்ந்தவர் அழகு. விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி வெள்ளையம்மாள் (வயது 60). இவர்களுடைய பேத்தி சரண்யா.

இவர்கள் 3 பேரும் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் ஊர் அருகே உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றனர். பின்னர் அவர்கள் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

கயிறு இறுக்கியதால் பெண் சாவு

இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் கம்பூர் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வைக்கோல் ஏற்றிய வேன் சென்றது. இந்த வேனின் பின்னால் கயிறு தொங்கிய நிலையில் அசைந்தபடி இருந்துள்ளது. இந்தநிலையில் அந்த வேனை, அழகு மோட்டார் சைக்கிளில் கடக்க முயன்றார்.

அப்போது எதிர்பாராதவிதமாக வேனின் பின்னால் தொங்கிய கயிறு வெள்ளையம்மாள் கழுத்தில் சிக்கி கொண்டது. இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து 3 பேரும் கீழே விழுந்தனர்.ஆனால் வைக்கோல் பாரம் ஏற்றிய வேன் வேகமாக சென்றதால் கயிற்றில் சிக்கிய வெள்ளையம்மாளின் கழுத்து துண்டாகி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அழகு, சரண்யா ஆகியோர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

வேன் டிரைவர் கைது

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கொட்டாம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வெள்ளையம்மாளின் உடலை ைகப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவர் கடுமிட்டான்பட்டியை சேர்ந்த ராஜா(50) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story