போலீஸ் நிலையம் முன் மகன்களுடன் பெண் தர்ணா
சங்கரன்கோவில் போலீஸ் நிலையம் முன் மகன்களுடன் பெண் தர்ணா
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த ஒருவரும், புதுக்கோட்டையை சேர்ந்த புவனேஸ்வரி (வயது 40) என்பவரும் திருப்பூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்தபோது திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் தம்பதியினர் சங்கரன்கோவில் பாரதிநகரில் வசித்தனர். இந்நிலையில் கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி புவனேஸ்வரி சங்கரன்கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். நேற்று காலை சங்கரன்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு கணவன் மற்றும் மனைவியை விசாரணைக்கு வர போலீசார் அழைத்து இருந்ததாகவும், ஆனால் காலை 11 மணி வரை கணவன் குடும்பத்தினர் வரவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் புவனேஸ்வரி ேபாலீஸ் நிலையம் முன்பு இரு மகன்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து புவனேஸ்வரி சங்கரன்கோவில் துணை சூப்பிரண்டு அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.