விஷப்பூச்சி கடித்து பெண் பலி
விஷப்பூச்சி கடித்து பெண் பலியானார்.
விருதுநகர்
திருச்சுழி,
திருச்சுழி அருகே பொம்மகோட்டையை சேர்ந்த சவுந்தர்ராஜன் மனைவி மருதி (வயது38). இவர் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது அவரை விஷப்பூச்சி கடித்ததாக கூறப்படுகிறது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து ம.ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story