அரசு பஸ் மோதி பெண் பலி
அரசு பஸ் மோதி பெண் பலி
திருமங்கலம்
திருமங்கலம் அருகே ஆலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டி. இவருடைய மனைவி சந்திரா (வயது 50). இவர்களுடைய பேரன் கார்த்திக்(9). பாண்டி சைக்கிளில் தன்னுடைய மனைவியை உட்கார வைத்துக் கொண்டு, முன்னால் பேரனை வைத்துக்கொண்டு ஆலம்பட்டியில் உள்ள தனியார் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திருமங்கலத்தில் இருந்து டி.கல்லுப்பட்டிக்கு சென்ற அரசு பஸ் சைக்கிள் மீது மோதியது. இதில் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்து இருந்த சந்திராவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பாண்டிக்கும், பேரனுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்த திருமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்தவர்களை திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் பலத்த காயமடைந்த சந்திரா மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி சந்திரா உயிரிழந்தார். மேலும் இச்சம்பவம் குறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.