மினிபஸ் மோதி பெண் சாவு


மினிபஸ் மோதி பெண் சாவு
x

கருங்கல் அருகே மினிபஸ் மோதி பெண் சாவு

கன்னியாகுமரி

கருங்கல் அருகே உள்ள செந்தறையைச் சேர்ந்தவர் ஜஸ்டின் ராஜூ, கொத்தனார். சம்பவத்தன்று ஜஸ்டின் ராஜூ தனது மனைவி சுபமேரியுடன் மோட்டார் சைக்கிளில் கருங்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார். பாலூர் அருகே சென்றபோது அவர்களுக்கு பின்னால் வந்த மினிபஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கணவன்-மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சுபமேரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story