டிப்பர் லாரி மோதி பெண் பலி


டிப்பர் லாரி மோதி பெண் பலி
x

திருமானூரில் புதுமனை புகுவிழாவுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது டிப்பர் லாரி மோதி பெண் பலியானார்.

அரியலூர்

புதுமனை புகுவிழா

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட கீழக்குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 37). இவரது மனைவி துர்காதேவி (29). இவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக திருமழபாடி கிராமத்தில் வசித்து வந்தனர். இந்தநிலையில் சுந்தரமூர்த்தியின் தந்தை சீனிவாசன் கீழகொளத்தூரில் புதிதாக வீடு ஒன்றை கட்டியுள்ளார்.

இந்தநிலையில் புதுமனை புகுவிழாவில் கலந்து கொள்வதற்காக சுந்தரமூர்த்தி தனது மனைவியுடன் நேற்று முன்தினம் சென்று விட்டு மீண்டும் தனது வீட்டிற்கு மொபட்டில் சென்று கொண்டு இருந்தார்.

பெண் பலி

திருமானூர் டாஸ்மாக் கடை அருகே சென்றபோது பின்னால் வந்த டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இதில் நிலைத்தடுமாறி தம்பதியினர் கீழே விழுந்தனர். அப்போது துர்காதேவியின் தலையில் டிப்பர் லாரியின் இடதுபக்க சக்கரம் ஏறி இறங்கியது. இதில் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து துர்கா தேவி பரிதாபமாக இறந்தார். விபத்தில் சுந்தரமூர்த்தி கை மற்றும் கால்களில் லேசான காயம் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த திருமானூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று துர்காதேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story