டிராக்டர் மோதி பெண் பலி


டிராக்டர் மோதி பெண் பலி
x

வாணாபுரம் அருகே டிராக்டர் மோதி பெண் பரிதாபமாக இறந்தார்.

திருவண்ணாமலை

வாணாபுரம்

தண்டராம்பட்டு அருகே உள்ள தரடாபட்டு பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி செல்வி (வயது 40).

இவரும் உறவினர்களான குமார் மற்றும் மாரியம்மாள் ஆகிய 3 பேரும் வரகூரில் உள்ள உறவினரின் விசேஷத்திற்காக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை குமார் ஓட்டினார்.

வாணாபுரத்தில் இருந்து தண்டராம்பட்டு நோக்கி கூடலூர் அருகே வந்தபோது கரும்பு ஏற்றிக்கொண்டு வந்த டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் 3 பேரும் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் செல்வி படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி செல்வி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் வாணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story