ரெயிலில் அடிபட்டு பெண் சாவு
கங்கைகொண்டான் அருகே ரெயிலில் அடிபட்டு பெண் பரிதாபமாக பலியானார்.
கயத்தாறு:
கங்கைகொண்டனை அடுத்த ஆலடிப்பட்டி பகுதியில் நெல்லை- தூத்துக்குடி செல்லும் ெரயில் தண்டவாளத்தில் 52 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்த தகவல் அறிந்த சந்திப்பு ரெயில் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். பெண்ணின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நெல்லை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அந்த பெண் ஆலடிப்பட்டியைச் சேர்ந்த செல்வராஜ் எமிலிரத்தினபாய் (வயது 52) என்பது தெரிய வந்தது. செல்வராஜ் தம்பதிக்கு குழந்தைகள் இல்லாததால், எமிலிரத்தினபாய் அப்பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர் ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயற்சித்த போது நெல்லை -தூத்துக்குடி இடையே இயக்கப்படும் ரெயில் மோதி இறந்தது தெரிய வந்தது.