சங்ககிரி அருகே ரெயிலில் அடிபட்டு பெண் சாவு
சங்ககிரி அருகே ரெயிலில் அடிபட்டு பெண் ஒருவர் உயிரிழந்தார்.
சங்ககிரி,
சங்ககிரி அருகே வைகுந்தம் செல்லப்பன்பட்டி பகுதியை சேர்ந்தவர் வசந்தி (வயது 43). இவருக்கு 23 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. திருமணம் ஆனதில் இருந்து வசந்தி மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், அடிக்கடி வீட்டை விட்டு வெளியே சென்று விடுவதாகவும் கூறப்படுகிறது. பின்னர் அவரை தேடிப்பிடித்து வீட்டிற்கு அழைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டை விட்டு வெளியே சென்ற வசந்தி வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் நேற்று காலை 9 மணியளவில் வைகுந்தம் அருகே ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி சென்ற ெரயிலில் அடிபட்டு இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும், ஈரோடு ெரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வசந்தியின் உடலை கைப்பற்றி சங்ககிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.