வேன் மோதி பெண் பலி
விழுப்புரம் அருகே வேன் மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக இறந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே வளவனூர் அம்பேத்கர்தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் மனைவி லதா (வயது 40). இவர் நேற்று வளவனூர் வெங்கடேஸ்வரா மருத்துவமனை அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த மினிவேன் எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது. மோதிய வேகத்தில் அந்த வேன் தறிக்கெட்டு ஓடி அங்கிருந்த மேலும் 2 வாலிபர்கள் மீதும் மோதி சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த லதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து அவரது உடலை வளவனூர் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த 2 வாலி்பர்களை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் இவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பது பற்றி விவரம் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் வளவனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் யார்? என்பது பற்றியும் விசாரணை நடத்தி வருகின்றனர்.