மாடு குறுக்கே சென்றதால் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த பெண் சாவு


மாடு குறுக்கே சென்றதால் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த பெண் சாவு
x

மாடு குறுக்கே சென்றதால் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த பெண் இறந்தார்.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானை அருகே உள்ள பாரதி நகரில் வசித்து வருபவர் சுரேஷ். (வயது 35) மாற்றுத்திறனாளி. இவரது மனைவி பிரேமலதா (27). இவர் சி.கே.மங்கலம் கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் கணக்காளராக பணிபுரிந்தார். நேற்று முன்தினம் இரவு இவரது சொந்த ஊரான தினையத்தூர் கிராமத்திற்கு சென்று விட்டு கணவன், மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் பாரதி நகருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது மதுரை- தொண்டி நெடுஞ்சாலையில் கடம்பாகுடி கிராமத்தின் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக மாடு ஒன்று குறுக்கே சென்றுள்ளது. அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் இருவரும் காயமடைந்தனர். இதில் பிரேமலதாவிற்கு தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பிரேமலதா அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது பற்றி தகவல் அறிந்ததும் திருவாடானை போலீசார் பிரேமலதாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். சாலை விபத்தில் உயிரிழந்த பிரேமலதாவிற்கு பிர்னேஷ் (12), தீபிகா (9) ஆகிய குழந்தைகள் உள்ளனர்.


Related Tags :
Next Story