குத்து விளக்கில் தவறி விழுந்த பெண் சாவு
குத்து விளக்கில் தவறி விழுந்த பெண் இறந்தார்.
மதுரை
மதுரை செல்லூர் சத்தியமூர்த்தி 6-வது தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி ஹேமலதா (வயது 42). இவருக்கு அடிக்கடி வலிப்பு நோய் ஏற்பட்டதால் அதற்கு சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவருக்கு திடீரென்று வலிப்பு ஏற்பட்டது. அப்போது அவர் எதிர்பாராதவிதமாக வீட்டில் இருந்த குத்துவிளக்கின் மீது தவறி விழுந்தார். அதில் படுகாயம் அடைந்து மயங்கி விழுந்த அவரை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஹேமலதா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story