மின்சாரம் பாய்ந்து பெண் சாவு
மின்சாரம் பாய்ந்து பெண் இறந்தார்.
புதுக்கோட்டை
திருவரங்குளம் அருகே வல்லத்திராகோட்டை ராமச்சந்திரபுரத்தை சேர்ந்தவர் அரங்கன். இவரது மனைவி சிட்டு (வயது 55). இவர் வயல் வேலைக்காக பாலக்குடிபட்டி காளி கோவில் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற மின்சார கம்பி அவர் மீது அறுந்து விழுந்தது. இதில் சிட்டு மீது மின்சாரம் பாய்ந்ததில் அவர் பரிதாபமாக இறந்தார். காலையில் வேலைக்கு சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது மகன் அவரை தேடி சென்றுள்ளார். அப்போது அவர் மின்சாரம் பாய்ந்து இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வல்லத்திராகோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிட்டு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story