மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் சாவு
நெல்லையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பலியானார்.
நெல்லை பாளையங்கோட்டை சீவலப்பேரி ரோடு கக்கன்நகர் பகுதியை சேர்ந்தவர் செல்லப்பாண்டியன். இவருடைய மகள் ஜெயலட்சுமி (வயது 25), இவர் அரசு வேலைக்காக தனியார் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி சீவலப்பேரி ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்கில் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போட்டுவிட்டு வீட்டுக்கு திரும்பினார். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், ஜெயலட்சுமி ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று காலையில் சிகிச்சை பலனளிக்காமல் ஜெயலட்சுமி உயிர் இழந்தார். இந்த சம்பவம் குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.