பாம்பு கடித்து பெண் சாவு
ராமநாதபுரம் அருகே பாம்பு கடித்து பெண் இறந்தார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே உள்ள ஆர்.காவனூர் பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவருடைய மனைவி பூபதி (வயது 65). இவர் குடும்ப பிரச்சினை காரணமாக அவரது கணவருடன் வாழாமல் அவரது தந்தை வீட்டில் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அவருக்கு சொந்தமான வயலில் விவசாய பணிகளை மேற்கொண்டிருந்தார். அப்போது அவரை பாம்பு கடித்துள்ளது. இதனால் உடனடியாக அவரை ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பூபதி இறந்தார். இதுகுறித்து அவரது மருமகன் சிவக்குமார் (42) அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story