2 பஸ்களுக்கு இடையே சிக்கி பெண் பலி


2 பஸ்களுக்கு இடையே சிக்கி பெண் பலி
x

விருதுநகர் பஸ் நிலையத்தில் 2 பஸ்களுக்கு இடையே சிக்கிய பெண் பலியானார்.

விருதுநகர்


விருதுநகர் பஸ் நிலையத்தில் 2 பஸ்களுக்கு இடையே சிக்கிய பெண் பலியானார்.

பழைய பஸ்நிலையம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி-பள்ளப்பட்டி ரோடு முத்துராமலிங்கநகரை சேர்ந்தவர் சாமிநாதன்(வயது 65). இவரது மனைவி வள்ளிமயில்(60). இவர் தனது உறவினர்கள் வெள்ளைச்சாமி மற்றும் புஷ்ப வள்ளியுடன் காரியாபட்டி அருகே உள்ள மாந்தோப்பு கிராமத்தில் துக்கம் விசாரிப்பதற்காக விருதுநகர் வந்தார்.

அப்போது விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் மாந்தோப்பு பகுதிக்கு செல்ல பஸ்சில் ஏற நின்று கொண்டு இருந்தார்.

பெண் பலி

இந்தநிலையில் மாந்தோப்பு பஸ்சை ஒட்டி, மற்றொரு டவுன் பஸ் பின்புறமாக வந்தது. இந்த இரு பஸ்களுக்கும் இடையில் வள்ளிமயில் சிக்கினார். அப்போது அதனை பார்த்த மற்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டனர்.

இதையடுத்து பஸ்களுக்கு இடையே சிக்கிய வள்ளி மயில் மீட்கப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி சாமிநாதன் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் மேற்கு போலீசார் அரசு பஸ் டிரைவர் பழனி (53) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பஸ்நிலையத்திற்கு உள்ளே இந்த விபத்து நடந்து இருப்பது பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


Related Tags :
Next Story