சரக்கு ஆட்டோ மோதி பெண் டாக்டர் பலி


சரக்கு ஆட்டோ மோதி பெண் டாக்டர் பலி
x

சுவாமிமலை அருகே சரக்கு ஆட்டோ மோதி அரியலூரை சேர்ந்த பெண் டாக்டர் பலியானார்.

தஞ்சாவூர்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகா காரைக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். என்ஜினீயர். இவரது மனைவி இமயவள்ளி(வயது 33). இவர், அரியலூரில் பல் டாக்டராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.நேற்று முன்தினம் மதியம் இமயவள்ளி கும்பகோணத்தில் உள்ள கோவிலில் அன்னதானம் செய்வதற்காக சுவாமிமலை அருகே நீலத்தநல்லூர் அசூர் பைபாஸ் குளம் அருகே மினி லாரியில் வந்து கொண்டிருந்தார்.

சரக்கு ஆட்டோ மோதி பலி

அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவும், மினி லாரியும் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன. இதில் மினி லாரியின் பின்னால் நின்று கொண்டிருந்த இமயவள்ளி படுகாயம் அடைந்தார். அவரை உறவினர்கள் உடனடியாக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இமயவள்ளி சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ.செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து சரக்கு ஆட்டோ டிரைவர் சுந்தர பெருமாளகோவில் பகுதியை சேர்ந்த ராமலிங்கம் மகன் விஜய் ஆனந்தை(32) கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.




Next Story